பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நடிகை சாக்ஷி அகர்வால், அந்நிகழ்ச்சியின் ரசிகர்களை நாய்கள் என திட்டும் காணொளி வைரலாகி வருகிறது.
கலா உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, நாயகியாகும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்து இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதன் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், ரசிகர்களின் அன்பை பெற தவறி பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் கெஸ்ட் ஆக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவர், ஷெரீனுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து கொண்டு சொன்ன வார்த்தை அவருக்கே வில்லங்கமாக முடிந்திருக்கிறது.
ஷெரின், வனிதா இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தை நினைத்து கண் கலங்கினார் ஷெரின். அவருக்கு ஆறுதல் கூறிய ஷாக்சி, 'குரைக்கிற நாய் குறைச்சுக்கிட்டு தான் இருக்கும், வெளிய உள்ளவங்க என்னமும் நினைச்சிட்டு போகட்டும் கவலைப்படாதே' என சர்ச்சையான முறையில் பேசி இருந்தார்.
இதனை கண்டு ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சிலர், ஷாக்சி பேசிய அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து, அவரது உண்மை முகத்தை வெளிக்காட்டி வருகின்றனர் .
#BiggBossTamil3 #BiggBossTamil3 @ikamalhaasan @EndemolShineIND— johnson (@johnson_jct) September 5, 2019
Sakshi says the public outside are dogs? seriously?
Who is she to enter the BB house, after evicted by public votes, comes in and say the public outside are dogs?
Is it includes @ikamalhaasan as well Sakshi? pic.twitter.com/ZWnA0m3mVn
Social Plugin