Ad Code

Responsive Advertisement

'மன்னன்' ரஜினி-கவுண்டமணி பாணியில் டிக்கெட் வாங்கி அலப்பறை செய்த ரசிகர் - வைரல் வீடியோ



ரஜினி,  விஜயசாந்தி, குஸ்பு, கவுண்டமணி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மன்னன். இத்திரைப்படத்தில் ரஜினி மற்றும் கவுண்டமணி தியேட்டரில் டிக்கெட் பெறுவதற்காக, முண்டியடித்துக்கொண்டு முன்னாள் வரிசையில் நிற்பவர்களின் மேல் ஏறி ஒரு பெரிய ரகளையே செய்து விடுவார்கள்.

இந்த காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை உண்டுபண்ணி வரும் நிலையில், பாகுபலி நாயகன் பிரபாஸ் ரசிகர்களும் இதே பாணியில் டிக்கெட் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் சாகோ, ரசிகர்கள் மத்தில் கலவையான விமர்சனங்களுடனும் அதே சமயம் வசூலை வாரி குவித்தும் வருகிறது இத்திரைப்படம்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் அமைந்துள்ள தியேட்டர் ஒன்றில் இத்திரைப்பட டிக்கெட்டை பெற கூட்டம் அலைமோதிய நிலையில், ரசிகர்கள் இருவர் கூட்டத்தில் பிறரின் மீது ஏறி தவண்டு முன்னேறி டிக்கெட் வாங்கும் வேடிக்கையான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.