Ad Code

Responsive Advertisement

டிக்கெட் விலை குறையாது..! நாங்களும் கேஸ் போடுவோம்... ரோகிணி திரையரங்கம் அதிரடி


அதிக கட்டணம் வசூலித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதன் உரிமையாளர் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

அரசு விதித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்ததாக சென்னை ரோகினி திரையரங்கத்தின் மேல், செம்பியன் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்ததாகவும், இதனை விசாரித்த நீதிமன்றம் ரோகிணி திரையரங்குக்கு 15000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து பதிவிட்ட ரோகினி திரையரங்க உரிமையாளர், மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களுக்கு அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையான, 150 மற்றும் வரியை சேர்த்துதான் நாங்கள் வசூலிக்கிறோம்.

எங்கள் திரையரங்கமும் மல்டிப்ளெக்ஸ் உரிமம் பெற்ற ஒன்று அதனால் டிக்கெட் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. எங்களை பற்றி அவதூறு கிளப்பிய இந்த செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர இருக்கிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.