Ad Code

Responsive Advertisement

கண்டுகொள்ளாத தமிழர்கள், 'ராட்சஸியை' தலையில் வைத்து கொண்டாடும் மலேசியர்கள் - நெகிழும் தயாரிப்பாளர்


SY கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சஸி. மற்றொரு சாட்டையாக பள்ளி கல்வி துறையில் நிகழும் முறைகேடுகளை சுட்டிக்காட்டிய இத்திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் பெரிய அளவில் வசூலை குவிக்க வில்லை.

பார்த்தவர்களை இம்ப்ரெஸ் பண்ண தவறவில்லை என்றாலும், இளம் சினிமா ரசிகர்கள் இத்திரைப்படத்தை தவிர்க்கவே பெரிய அளவில் பாக்ஸ் ஆபிசில் ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில் இத்திரைப்படம் மலேசியாவில் வெளியாக, தமிழர்கள் அல்லாத மலேசியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ராட்சஸி திரைப்படத்தை பாராட்டி மலேசிய ரசிகர்கள் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவிக்க, அந்த பதிவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார் அதன் தயாரிப்பாளரான SR பிரபு.