Saturday, 7 September 2019

புலி பதுங்குவதே பாயதான்...! திராவிட கட்சிகளை கதிகலங்க வைக்கும் ரஜினியின் அரசியல் ராஜ தந்திரம்..!


நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே அறிவித்துவிட்டாலும், அதிகாரபூர்வமாக கட்சி துவங்காமலேயே இருக்கிறார்.

இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா என்கிற சந்தேகத்திலேயே மக்களும் திரைத்துறையினரும் இருந்துவரும் நிலையில், அவர் கட்சி துவங்குவது குறித்த உறுதித்தன்மையான தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்பொழுது தர்பார் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், பட ரிலீசுக்கு பிறகு கட்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி படுத்தும் விதத்தில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கட்சி அலுவலகங்கள் துவங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அலுவலக பொறுப்பும் படித்த இளைஞர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு, தொகுதிகளில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை ரஜினியிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பையும் கொடுத்து, தமிழகத்தின் பழம்பெரும் திராவிட அரசியல்கட்சிகளே செய்யாத அளவிற்கு பக்காவாக ஒருங்கிணைக்க திட்டம் தீட்டி இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

மேலும் கோடி கோடியாக பன்னாட்டு நிறுவனங்கள் ரஜினியின் கட்சிக்கு நிதி கொடுக்க தயாராக இருந்தாலும், தான் தொடர்ச்சியாக நடித்துவரும் படங்களின் சம்பளத்தை மட்டுமே உபயோகப்படுத்துவது என்கிற முடிவிலும் விடாப்பிடியாக இருக்கிறாராம்.

இப்படி புலி பதுங்குவதே பாயத்தான் என்கிற வகையில் பார்த்து பார்த்து திட்டம் தீட்டி வரும் சூப்பர்ஸ்டார், திரைத்துறையில் உள்ளது போல அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த முழு வீச்சில் செயல்பட்டு வருகிறாராம்.
Disqus Comments
'