A.R முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்பட பர்ஸ்ட் லுக் போட்டோக்கள் இணையத்தை சூறையாடி வருகிறது.
போலீஸ் அதிகாரியாக நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் மிரட்ட இருக்கும் திரைப்படம் தர்பார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கிறார்.
மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அவ்வப்போது படப்பிடிப்பு பகுதி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தும் படக்குழுவினருக்கு தலைவலியும் அளித்து வந்தது.
இந்நிலையில் அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரொடக்ஷன்ஸ்' இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. படையப்பா ரஜினியை நினைவு படுத்துவது போல கட்டுடலை காட்டி, வெறித்தனமான லுக்கில் தர்பார் ரஜினி தோன்றி இருக்க, விவேக் உள்ளிட்ட நடிகர்களும் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
Sivaji the boss; Durbar the mass! சிவாஜி னா Boss; தர்பார் னா Mass! @rajinikanth @ARMurugadoss @LycaProductions @soundaryaarajni @ash_r_dhanush pic.twitter.com/eJd9EKXXLE— Vivekh actor (@Actor_Vivek) September 11, 2019
Social Plugin