இந்தியாவில் அதிக சர்ச்சைக்கு ஆளான பப்ஜி வீடியோ கேம் தயாரிப்பாளர்
நிறுவனத்தின் ஒருவருட வருமானம் குறித்த தகவல் தற்பொழுது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிளேயர் அன்நௌன் பேட்டில் கிரவுண்ட் (PUBG) எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, உலக அளவில் வீடியோ கேம் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.
டென்சென்ட் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு உலகமுழுவதும் பல்லாயிரம் கோடி நபர்களால் விளையாடப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் சுமார் 19.8 பில்லியன் டாலர் எனும் மாபெரும் லாபத்தை ஈட்டி இருக்கிறது.
அதாவது இந்திய மதிப்பில், சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை அந்நிறுவனம் ஒரே வருடத்தில் சம்பாரித்து இருக்கிறது. இதன் காரணமாக உலகிலேயே அதிக வருவாய் ஈட்டிய வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது டென்சென்ட்.
Social Plugin