Ad Code

Responsive Advertisement

இதெல்லாம் ரொம்ப கேவலம்..! விஜய் டிவி பிரியங்காவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்


விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் எல்லை மீறுவது போன்று இருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், தொகுப்பாளர் பிரியங்காவும் தற்பொழுது சர்சையில் சிக்கி இருக்கிறார்.

முன்னதாக மாகாபா உடன் இணைந்து உருவ கேலியில் ஈடுபடுவதாக ப்ரியங்காவின் மீது குற்றச்சாட்டு ஒன்றினை வைத்தார் நடிகை ஸ்ரீ ப்ரியா. இது ஒருபுறம் இருக்க தற்பொழுது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் செய்யும் காரியங்களும் சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறது.

அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும், இவர் யார் மீதாவது ஆசை படுவது போன்றோ, இல்லை இவர் மீது வேறு யாராவது காதல் கொள்வது போன்றோ கான்செப்டுகள் அமைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.

இதை கண்டு போட்டியாளர்கள், நடுவர்கள் கைதட்டி சிரித்தாலும், 'குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகளில், திருமணமான ஒருவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கேவலம்' என சகட்டு மேனிக்கு விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.