Ad Code

Responsive Advertisement

போடு போடு தகிட தகிட...! ஆஸ்கார் செல்லும் 'ஒத்த செருப்பு'...


நடிகர் பார்த்திபன், இயக்கி நடித்து உலகிலேயே முதல் தனி ஒருவராக இயக்குனரே நடித்து வெளியான படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு.

அதெப்படி ஒருவரை மட்டுமே படம்முழுவதும் பார்த்து கொண்டிருப்பது? என யோசித்து சென்றவர்களையும் திருப்தி படுத்திய காரணத்தினால், இத்திரைப்படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் என சாதனைகளை படைத்திருக்கும் இந்த திரைப்படம், விரைவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதான ஆஸ்கார் வெல்லும் என்ற நம்பிக்கை திரையுலகினர் மத்தியில் உருவாகி உள்ளது.

இப்படி மக்கள், திரையுலகினர் தனது முயற்சிக்கு கொடுத்த பாராட்டுக்கள் காரணமாக, ஒத்த செருப்பு திரைப்படமானது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.  

இந்த வருஷம் கண்டிப்பா ஒரு ஆஸ்கார் அவார்ட் கன்ஃபார்ம், கொண்டாட தயாராகுங்க மக்களே..