Ad Code

Responsive Advertisement

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜிதில்லையாம்...! ரஜினியே சொன்ன தகவல்


அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் தமிழ் திரைத்துறையில் கடும் போட்டி நிலவி வருகிறது. என்றாலும் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து அந்த பட்டத்தை பெற, நடிகர் விஜய் மற்றும் அஜித் பிறரை காட்டிலும் முன்னணியில் உள்ளனர்.

இந்த பஞ்சாயத்து காரணாமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் முட்டிமோதிக்கொள்ள, தலைப்புக்கு சொந்தக்காரரான ரஜினிகாந்தே அடுத்த
சூப்பர் ஸ்டார் யார் என்பதை, தன் வாயாலேயே  வெளியிட்ட தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து திரைப்பட நிகழ்வு ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பு பேசிய ரஜினி,'ஆன்மீக காரியமாக கோயம்பத்தூர் பயணித்த போது, ஏர்போர்ட்டில் மற்றொரு நடிகர் ஒருவரது ரசிகர்கள் அதிக அளவில் குவிந்து என்னை வரவேற்றனர்.

அப்பொழுது என் நண்பரிடம் அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என தெரிவித்தகாக பேசி இருந்தார். குறிப்பிட்ட நிகழ்வு 10 வருடங்களுக்கு முன்பு, நிகழ்ந்த நிலையில், அப்பொழுது  சூப்பர் ஸ்டாரை வரவேற்றவர்கள் தளபதி விஜயின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின்  இந்த பேச்சை மேற்கொடிட்டு காட்டி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.