Ad Code

Responsive Advertisement

இனிமே படம் பார்க்க டிக்கெட் விலை 2000..! அறிமுகமாகிறது நவீன தியேட்டர்கள்


அதி நவீன வசதிகளுடன் சென்னையில் உதயமாக இருக்கும் தியேட்டர்கள் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார் பிரபல அபிராமி மெகா மால் உரிமையாளரான அபிராமி ராமனாதன்.

தற்போதைய விலை வாசியில், நடைமுறையில் இருக்கும் தியேட்டர்களுக்கே செல்ல ஆள் இல்லை எனும் பட்சத்தில், உலகிலேயே முதன் முறையாக தான் அறிமுகப்படுத்த இருக்கும் அதிநவீன திரையரங்குகள் குறித்து பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் அபிராமி ராமனாதன்.


இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எதிர்காலத்தின் துவக்கமாக, எங்கேயும் இல்லாதபடி திரையரங்குகளை உருவாக்க இருக்கிறேன். 200 பேர் பார்க்கும் பிரமாண்ட இடத்தில் வெறும் 60 பேர் மட்டுமே பார்க்கும் படி, படுக்கை வசதியுடனும்,

டிக்கெட் புக் செய்தால் வீட்டிற்கே வந்து பிக்கப், டிராப் செய்யும் கார் வசதியுடனும், பாப்கார்ன் உள்ளிட்ட ஸ்னாக்ஸ், இன்டெர்வல் இடைவெளியில் விதவிதமான பஃப்பே உணவு ஆகியவை இலவசமாகவும் கிடைக்கும் படி திரையரங்குகள் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வித தியேட்டர்கள் உருவாக்கும் பணியையும் ஏற்கனவே துவங்கி விட்டேன்' எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்டு ஒரு சிலர் மெய் சிலிர்த்தாலும், சாதாரண தியேட்டரில் படம் பார்த்தாலே பர்ஸ் பழுத்துரும், இதுல இவ்வளவு வசதின்னா மொத்த சம்பளத்தையும் கொடுத்துட்டுல வரணும் என பலரை புலம்பவும் வைத்துள்ளது.