Ad Code

Responsive Advertisement

விஜயாவது..! சூப்பர் ஸ்டாராவது..! பணிய மறுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்...


விஜய், ரஜினி போன்ற தமிழ் திரையுலக உச்சங்களின் திரைப்படங்களில் சிறு காட்சிகளில் நடித்து விட மாட்டோமா? என பலர் ஆவலில் காத்துக்கொண்டிருக்க, மாறாக 'தன்னை தேடி வரும் வாய்ப்புகளையும் இழந்து விடுவார்' என லேடி சூப்பர் ஸ்டார் குறித்து பேச வைத்திருக்கிறது அவரது நடவடிக்கைகள்.

ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சியை வாரி இறைத்து ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை நயன்தாரா, தற்பொழுது தனது நடிப்பினால் அவர்களை விடாது தன் வசம் வைத்து இருக்கிறார்.

இதன் காரணமாக நாயகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் இவர் நாயகிக்கான முக்கியத்தும் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தான் நடிக்கும் படம் எவ்வளவு பிரமாண்டமானதாக இருந்தாலும் அதன் விளம்பரங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்ற கட்டளையையும் விதிக்கிறாராம் நயன்.

இந்நிலையில், விஜயுடன் இவர் நடித்த பிகில் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள நடிகர் விஜயே அழைப்பு விடுத்தும் நயன்தாரா கலந்துகொள்ளவில்லை. இதனால் படக்குழுவினரிடையே சிறு சலசலப்பு நிலவி வருகிறது.

மேலும் ரஜினியுடன் தர்பார் திரைப்படத்திலும் இவர் நடித்து வரும் நிலையில், அதன் விளம்பர நிகழ்ச்சிகளிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என ஒத்த காலில் நிற்கிறாராம் நம் நயன்.