Ad Code

Responsive Advertisement

தன்னையே கூலிப்படை ஏவி கொலை செய்த நபர்... ராஜஸ்தானில் வினோதம்


கடன் தொல்லையிலிருந்து மீள தன்னை தானே கூலிப்படையை ஏவி கொலை செய்து கொண்டிருக்கிறார் விசித்திர நபர் ஒருவர்.

கடன் சுமை தாங்காது தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு மத்தியில் வித்யாசமான முடிவால், தான் இறந்தாலும் தன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார் ராஜாஸ்தானை சேர்ந்த பல்பீர் சிங் கரோல் என்பர்.

இச்சம்பவம் குறித்த முழு விவரம் இதோ, ராஜாஸ்தானின் பில்வாரா பகுதியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் விசாரித்த போலீசார் அது, பல்வீர் சிங் என அடையாளம் கண்டிருக்கின்றனர்.

அவர் கடைசியாக பேசிய மொபைல் எண்ணை கொண்டு, சுனில் நாயக் எனும் சந்தேகப்படும்படியான நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கும் போதுதான் வெளியாகி இருக்கிறது விபரீத தகவல்.

குறிப்பிட்ட நபர் அளித்த வாக்குமூலத்தில்,  பல்பீர் சிங் 20 லட்சம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் போனதால், கடன் தொல்லை பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேறுவழியின்றி அவரையே கொலை செய்ய கூறினார்.

அதற்காக 80,000 ரூபாயும் பேசி 5000 ரூபாயை முதல் தவணையாக கொடுத்தார். மேலும் தான் இறந்த பிறகு கிடைக்கும் 50 லட்சம் காப்பீட்டு தொகையால், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதுடன், குடும்பத்தையும் காப்பாற்றலாம் என்கிற யோசனையாலேயே பல்வீர் சிங்க் இந்த முடிவுக்கு வந்ததார்' எனவும் விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர்.