Ad Code

Responsive Advertisement

கரணம் தப்பினால் மரணம்... மும்பை பெண்கள் படும் பாடு... சீரியல் தமிழச்சிகள் பார்க்க வேண்டிய வீடியோ


வீட்டில் சீரியல் பார்த்து கொண்டு வாழ்வில் நிம்மதியே இல்லை. இப்படியொரு கடினமான வாழ்வு எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாது என புலம்பும் பல பெண்களுக்கு சாட்டையாடியாக வைரலாகி வருகிறது வீடியோ ஒன்று.

தமிழகம் போல அல்லாது, வட மாநிலங்களில் வேலைக்கும் செல்லும் பெண்கள் நிம்மதியாக செல்ல முடியாது. பைக், கார், ஆட்டோ என சென்றால் வாகன நெரிசலால் சரியான நேரத்திற்கு செல்ல இயலாது. இதன் காரணமாக ரயில் பயணங்களை நம்பி இருக்கின்றனர் அப்பகுதி பெண்கள்.

இந்த ரயில் பயணங்களும் நாம் நினைப்பது போல எளிதாக இருப்பதில்லை, அதிகபட்சம் 30,40 பேர் செல்லலாம் எனும் இடவசதி கொண்ட ரயில் பெட்டிகளில் ஏற 200க்கும் மேலான பெண்கள் போட்டி இடுகின்றனர்.

இதனால் கரணம் தப்பினால் மரணம் எனும் ஆபத்தான நிலையில் ஆண்களை போல தொங்கி கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக மும்பையில் ரயிலில் தவறி விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

என்றாலும் வாழ்வை நடத்த, இப்படியொரு ரிஸ்க் எடுக்கும் இவ்வித பெண்களை பார்த்து சீரியல் பார்த்து கண்ணீர் விடும் பல பெண்கள் திருந்தினால் நன்றாக இருக்கும்.