Ad Code

Responsive Advertisement

சாக்லேட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் சில்மிஷம்..! கம்பி என்னும் '72 வயது' தாத்தா..!


ஆடு மேய்க்கும் சிறுமிகளிடம் 72 வயது முதியவர் சில்மிஷம் செய்த நிலையில் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பாட்டு இருக்கிறார்.

கோவை மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் 72 வயது முதியவரான பெருமாள் சாமி. இவரது வீட்டின் அருகே சிறுமிகள் 3 பேர் ஆடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமிகளுக்கு சாக்லேட் பிஸ்கட்டுகள் கொடுத்து தனது வீட்டிற்கு வரவழைத்த முதியவர் அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தாலும் பயத்தினால் பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர் பாதிக்கப்பட்ட சிறுமிகள். இப்படியொரு சூழ்நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்று பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமை அப்பகுதியில் நடத்த, அதில் கலந்து கொண்ட சிறுமிகள், சுதாரித்து கொண்டு தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையை முகாமில் தெரிவித்தனர்.

தொண்டு நிறுவனமும் விரைந்து பெருமாள் சாமியின் மீது பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.