Ad Code

Responsive Advertisement

பொய்..! பித்தலாட்டம்..! மோசடி..! பிக்பாஸ் மீராவின் பரிதாப நிலை...


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பொய் பேசுகிறார், வாக்குகளை பெற வெளியே ஆள் செட் செய்கிறார் என்று பார்த்தால், வெளியேயும் பல தில்லாலங்கடி வேலைகளை செய்திருப்பதாக மீரா மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார் 'ஜோ மைக்கேல்' என்பர்.

குற்றச்சாட்டு மட்டுமின்றி அவர் செய்த மோசடிகளுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதன் காரணமாக 'ஜோ மைக்கேல் தொல்லை தாங்க முடியவில்லை. அவனை ஆள் வைத்து தூக்கிவிட்டு' என கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரமும் வெளியானது.


இந்நிலையில் தகுந்த ஆதாரங்கள் இருந்தும், அரசியல் செல்வாக்கால் தப்பித்து வந்த மீரா தற்பொழுது போலீஸ் தேடும் குற்றவாளியாகி இருக்கிறார்.

ஜோ மைக்கேல் கொடுத்த புகாரை விசாரிக்க பல முறை சம்மன் அனுப்பப்பட்டும், மீரா ஆஜராகாததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாகி இருக்கும் அவரை போலீசார் தேடிவருவதாக ஒரு தகவலும் இப்போது வெளியாகியுள்ளது..