பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கோல்மால் வேலைகள் பார்த்து பாதிவரை தாக்குப்பிடித்து நின்ற போட்டியாளர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டினுள் எப்படி சர்ச்சைகளுடன் வலம்வந்தாரோ அதே போல தான், நிஜ வாழ்விலும் இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள்.
நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரே, மீரா மிதுன் மீது மோசடி வழக்கு தொடுத்திருந்தார் தொழிலதிபரான ஜோ மைக்கேல் என்பர். அதனை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் காரணமாகவும், மீராமிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்குகள் குறித்து விசாரிக்க, நேரில் ஆஜாரகுமாறு மீரா மிதுனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. என்றாலும் அவர் வழக்கு சம்பந்தமாக பேச நேரில் வராத நிலையில், அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சம்பந்தப்பட்டவரான ஜோ மைக்கேல் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin