Ad Code

Responsive Advertisement

எனக்கு எண்டே கிடையாது..! குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குவியுதாம் படவாய்ப்பு...


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 'இவருக்கு நம்ம ஜுலி எவ்வளவோ பரவாயில்லை' என ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு அலப்பறைகள் செய்தவர் நடிகை மீரா மிதுன்.

பிக்பாஸ் போதாதென்று, 'இவர் மோசடி செய்தார், கொலை மிரட்டல் விடுத்தார்' என சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பேசி வருகிறார் தொழிலதிபர் ஜோ மைக்கேல்.

இந்த குற்றச்சாட்டுகள் ஒரு புறம் சென்று கொண்டிருக்க, மீரா மிதுனுக்கு படவாய்ப்புகளும் தொழில்வாய்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சிவகார்த்திகேயனின் எங்க வீட்டு பிள்ளை, மூடர் கூடம் நவீன் இயக்கும், அக்னி சிறகுகள் என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வரும் இவர்,

'எண்டுகார்டு போட்டு எகத்தாளமா பண்ணுறீங்க? எனக்கு எண்டே கிடையாது!' என காலரை தூக்கி விட்டுக்கொண்டு திரிகிறாராம்.