Ad Code

Responsive Advertisement

அத்தனையும் செட்டப்புதான்..! 'பிக்பாஸ்' ஷோவில் 'மீரா' செய்த பித்தலாட்டங்கள் அம்பலம்..


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அப்பட்டமான போலி தனத்தால் அதிக வெறுப்பை சம்பாதித்தவர் நடிகை மற்றும் சூப்பர் மாடலான மீரா மிதுன்.

இத்தனை வெறுப்புகளை சம்பாதித்த பின்னரும், அந்நிகழ்ச்சியில் 35 வது நாள்வரை தாக்குப்பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். யாரை கேட்டாலும் மீராவை திட்டுகிறார்கள், ஆனால் 4 வாரங்களாக நாமினேஷன் வந்தும் இத்தனை வாக்குகள் பெற்று  தப்பிக்கிறாரே என்பதும் மக்கள் மனதில் எழுந்த கேள்வி.

இந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குபிடிப்பதற்காக, அதனுள் நுழையும் முன்னரே முன்னேற்பாடாக மீரா செய்து வைத்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய பிரபல தொழிலதிபரும், மீரா மீது கொலை மற்றும் மோசடி வழக்குகளை தொடர்ந்தவருமான ஜோ மைக்கேல்,
'பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வாங்கிய ஓட்டுகள் கூட நியாயமானது அல்ல.

உள்ளே செல்லும் முன்னரே தனது மேனேஜர் மூலமாக, வாரம் தோறும் தனக்கு வாக்களிக்க ஒரு குழுவையே செட் செய்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் மீராவின் புகழ் பாடியதும் இந்த குழு தான்' என அம்பலப்படுத்தியதுடன்,

மீராவின் தாயாரே 'அவளே வாங்கியிருந்தால் ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது' எனக்கூறும் ஆடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.