வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு நிறைவேற்றாமல் விட்ட அரசியல்வாதிக்கு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த மக்கள் கொடுத்த தண்டனை உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ஹோஸ்ட்டன் பகுதியின் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹவாஸிர் சுபாஷியன். இவர் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவுநீர் பாதைகளை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தே தேர்தலில் வெற்றி பெற்றார்.
ஆனால் வருடங்கள் கடந்த பின்னும் எந்த ஒரு முயற்சியையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மேயர் என்றும் பாராது, அவருக்கு பெண்கள் அணியும் ஆடைகளை அணிவித்து தெரு தெருவாக அழைத்து சென்று வினோத தண்டனை வழங்கினர்.
இந்த தகவல் உலக மீடியாக்களில் வெளியானதை தொடர்ந்து, உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும், தங்களாலும் இது போன்ற தண்டனைகளை ஊழல் வாதிகளுக்கு அளிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நம்ம ஊரிலும் இப்படி நடந்தா எப்படி இருக்கும்??? உங்கள் கற்பனை குதிரைகளை தட்டி விடுங்கள் மக்களே..
Social Plugin