பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா, தனது கத்தி வெட்டு காயங்களை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.
டாஸ்க் ஒன்றின் போது தமிழகம், கர்நாடக தண்ணீர் பிரச்சனை குறித்து எதேச்சையாக பேசிவிட, பொங்கியெழுந்த சக போட்டியாளர்கள் மதுமிதாவை திட்டி தீர்க்க மனமுடைந்த மதுமிதாவோ, கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டார்.
அதன் பிறகு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வெளியேறிய அவர், முதன் முறையாக நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியினுள் நடந்தவற்றை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கமாக கூறினார்.
இதன் அடுத்தகட்டமாக தனது கத்தி வெட்டு காயங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆழமான காயங்களை கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்து போய் விட்டனர்.
Social Plugin