Ad Code

Responsive Advertisement

மெரினா கடற்கரையில் சில்மிஷம்..! காதல் ஜோடிகளை குறிவைத்து தூக்கிய பலே திருடன்


சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் பல வருடங்களாக கைவரிசை காட்டிய திருடன் கைது செய்யப்பட்டு இருக்கிறான்.

உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா, கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ எதையும் பொருட்படுத்தாது காதல் ஜோடிகள் கூடும் புகலிடமாக விளங்கி வருகிறது.

இவர்களுள் பொதுவெளி என்றும் பாராமல், சில்மிஷங்களில் ஈடுபடும் காதல் ஜோடிகளும் அதிகம். இப்படி எல்லை மீறும் காதல் ஜோடிகளை குறிவைத்து பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் தியாகராஜன் என்கிற நபர்.

வாடகைக்கு எடுக்கும் போலீஸ் உடையுடன் கடற்கரையில் வலம்வரும் இவர், ரோந்து பணியில் ஈடுபடுவதை போல சென்று சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளிடம், 'வீட்டில் சொல்லிவிடுவேன்' என மிரட்டி பல வருடங்களாக பண பறிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.

சமீபத்தில் இதே போன்று ஒரு ஜோடியை மிரட்ட, இருவருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தின் போது நிஜ போலீசார் அங்கு வந்ததால், கையும் களவுமாக சிக்கிய தியாகராஜனை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றிருக்கின்றனர்.