Ad Code

Responsive Advertisement

அசத்தும் மங்கள்யான்...! மீண்டும் சாதித்த இஸ்ரோ...! உலக நாடுகள் பாராட்டு


நிலவின் தென் துருவம் நோக்கி பயணித்த சந்திராயன், வெற்றியை நூலிழையில் தவற விட்டு கோடிக்கணக்கான மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. என்றாலும்  குறைந்த செலவில் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியதற்காக ஒட்டுமொத்த உலகமே 'இஸ்ரோ'வை வியந்து பாராட்டியது.

இந்நிலையில் இஸ்ரோவின் முந்தைய படைப்பான மங்கள்யான் செயற்கைக்கோளும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான் விண்கலத்தை ஏவியது.


இந்த விண்கலம் செப்டம்பர் 24, 2014-ம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது. உண்மையிலேயே அந்த விண்கலன் வெறும் 6 மாதங்கள் மட்டுமே செவ்வாய் கிரகத்தை  ஆய்வு செய்யும் திட்டத்ததோடு அனுப்பப்பட்டது.

ஆனால் அக்கிரகம் நோக்கிய 10 மாத பயணத்தின் போது மங்கள்யான் எரிபொருளை சிக்கனமாக எடுத்துக்கொண்டதன் காரணமாக, 5 வருடங்களை வெற்றிகரமாக கடந்தும் தனது ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 

இந்த செயற்கைகோள், இதுவரை 1000க்கும் மேலான செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள், பல நூறு கிலோமீட்டர்கள் உயர ஏற்படும் புழுதி புயல்கள் என செவ்வாய் கிரகம் குறித்து எவரும் அறியாத பல தகவல்களை கண்டறிந்து சாதனை படைத்து இருக்கிறது.

மேலும் 1வருட காலம் இச்செயற்கை கோள், செயல்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ள நிலையில், '450 கோடி எனும் திரைப்படம் எடுக்கும் பட்ஜெட்டில் உருவாகி மாபெரும் சாதனைக்களை மங்கள்யான் புரிந்து வருவதாக' உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகிறது.