Ad Code

Responsive Advertisement

'அனைவரும் பார்க்க வேண்டிய படம்' - ராட்சஸியை புகழ்ந்த மலேசிய கல்வித்துறை அமைச்சர்


SY கெளதம் ராஜ் இயக்கத்தில், SR பிரபு தயாரிக்க ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசி. இத்திரைப்படத்திற்கு தமிழகத்தை விட அதிக வரவேற்பு மலேசியாவில் கிடைத்து வருகிறது.

கடந்த ஜுலை மாதம் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும், இளசுகள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படியொரு நல்ல படத்தை எவரும் கண்டுகொள்ளவில்லையே என பலர் வருத்தமடைந்த நிலையில், இப்படத்திற்கான அங்கீகாரம் மலேசியாவில் கிடைத்திருக்கிறது.


ஆம் அதுவும், அந்நாட்டு கல்வி துறை அமைச்சரே இத்திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போய் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து மலேசிய கல்வித்துறை அமைச்சரான மஸ்லி பின் மாலிக் கூறியதாவது,

'சமீபத்தில் பிற அதிகாரிகளுடன் ராட்சஸி படத்தினை காண நேரிட்டது.
கண்டிப்பாக இது அனைவரும் காண வேண்டிய ஒரு திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருந்தது. நாயகி கீதாராணியின் கதாபாத்திரம் அருமையாக கூறப்பட்டு இருக்கிறது.

ஒரு கல்வித்துறை அமைச்சராக இத்திரைப்படத்தை கண்டதும் ஒரு வித்தியாச அனுபவம். இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் எங்கள் நாட்டின் கல்வி சூழலை எடுத்துரைப்பதை போலவே இருந்தது.

பெரிய மாற்றங்களும் சாத்தியம் என இத்திரைப்பப்படத்தில் எடுத்துரைத்த கீதாராணி ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் தான். இத்திரைப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டதை போல மாற்றங்களை எங்கள் கல்வி துறையில் கொண்டு வர விரும்புகிறோம்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என யாராக இருந்தாலும் ராட்சஸி கண்டிப்பாக காணவேண்டிய ஒரு திரைப்படம்' என புகழ்ந்து தமிழ் திரையுலகையே மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.