Thursday, 5 September 2019

எல்லாம் மனைவி வந்த அதிர்ஷ்டம் தான்..! மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆர்யா


திரைத்துறையில் சில ஆண்டுகளாகவே தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த ஆர்யா, மகாமுனி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் தற்பொழுது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று இருக்கிறார்.

'மௌனகுரு' எனும் படத்திற்கு பிறகு 8 வருடங்கள் கழித்து சாந்தகுமார் இயக்கி இருக்கும் திரைப்படம் மகாமுனி. ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டது.

பத்திரிக்கையாளர்கள், திரையுலகினர், ஆன்லைன் விமர்சகர்கள் இந்த சிறப்பு காட்சியை கண்டு கழிக்க, அனைவருமே படம் மிக மிக அற் புதமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.



இந்த தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. செப்டம்பர் 6ம் தேதி இத்திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்,

தனது திரைப்படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருக்கும் நேர்மறை விமர்சனங்களை எண்ணி மகிழ்ச்சியில் இருக்கும் ஆர்யா, 'அனைத்திற்கும் மனைவி சாயீஷா வாழ்க்கையில் வந்த அதிர்ஷ்டம் தான் காரணம்' என நட்புவட்டாரங்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

    
Disqus Comments
'