சினிமாவில் மட்டும்தான் இந்திய நடிகைகள், நம்ம ஊரு லோக்கல் பசங்களை காதலிப்பார்கள் போல. நிஜ வாழ்விலோ அமெரிக்க, ரஸ்யா என மேலை நாட்டு ஆண்களையே தேடிப்போய் காதலில் விழுகின்றனர் நம்மூர் நடிகைகள்.
முன்னதாக ப்ரியங்கா சோப்ரா, நடிகை ஷ்ரேயா ஆகியோர் வெளிநாட்டில் தங்களது காதலர்களை தேர்ந்தெடுத்து காதல் திருமணம் செய்து கொண்டனர். நடிகை ஸ்ருதி ஹாசன், இலியானா ஆகியோர் மேலை நாட்டு காதலர்களுடன் திருமணம் வரை சென்று இறுதியில் காதலை முறித்துக்கொண்டனர்.
இவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகை டாப்ஸி. தனது ரிலேஷன் ஷிப் ஸ்டேட்டஸ் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர் இந்த தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார்.
குறிப்பிட்ட பேட்டியில், 'சில வருடங்களாக ஒருவருடன் நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தோன்றும்போது, அவரை திருமணம் செய்து கொள்வேன். மேலும் அந்த நபர் நம் நாட்டை சேர்ந்தவர் கிடையாது' என தெரிவித்திருந்தார்.
Social Plugin