Ad Code

Responsive Advertisement

10 வருடங்களாக கிடைக்காத சந்தோசம்...! லாஸ்லியாவுக்கு 'விஜய் டிவி' கொடுக்க இருக்கும் சர்ப்ரைஸ்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் நட்சத்திர போட்டியார்களில் ஒருவரான லாஸ்லியாவுக்கு விஜய் டிவி கொடுக்க இருக்கும் இன்ப அதிர்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழில் கொஞ்சி பேசி, தனது கியூட்டான நடனங்களினால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. 

இவருக்கென ஒரு தனி ரசிக பட்டாளமே உள்ளது. கண்டிப்பாக இறுதி வரை நிகழ்ச்சியில் நிலைத்து நிற்பார் என உறுதியாகிவிட்ட நிலையில், அந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற ஃப்ரீஸ் டாஸ்க்கிற்கு, கடந்த பத்து வருடங்களாக கனடாவில் வேலை செய்து வரும் லாஸ்லியாவின் தந்ததையை அழைத்துவரும் பணிகளில் மும்மரமாக இறங்கியுள்ளதாம் விஜய் டிவி.

தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவரான லாஸ்லியா ஒருமுறை கடந்து பத்து வருடங்களாக, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக, தங்களை பிரிந்து கனடாவில் டிரைவராக பணிபுரிந்து வரும் தந்தையை மிஸ் பண்ணுவதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரீஸ் டாஸ்கில் லாஸ்லியா தனது தந்தையை பார்க்கும் போது, மிகப்பெரும் பாசப்போராட்டமே நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.