Ad Code

Responsive Advertisement

நாமினேட்டும் செய்து விட்டு என்னா நடிப்புடா சாமி...! லாஸ்லியவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்


சேரனை நாமினேட்டும் செய்து விட்டு அவர் வெளியேறும்போது  நீலிக்கண்ணீர் வடிப்பதாக போட்டியாளர் லாஸ்லியாவை திட்டி தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 78வது நாளான நேற்று, அதன் ஒரு போட்டியாளரான  இயக்குனர் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரட் ரூமிற்கு அனுப்பப்பட்டார். வெளியேறுவது யார் என அறிவித்தவுடன், சேரப்பா என அவரை செல்லமாக அழைக்கும் லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறினார்.

முன்னதாக சேரனுடனான லாஸ்லியாவின் மகள் உறவு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் கண்டிருந்தது. அப்போது சேரன் மகள் போல கருதிய லாஸ்லியாவே அவரை நாமினேட் செய்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் கண்ணீரே வராமல் கதறும் காணொளிகளை கண்ட ஒரு சில ரசிகர்கள், இவரே சேரனை நாமினேட் செய்திருக்கிறார். இப்பொழுது அவர் வெளியேறும் போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என லாஸ்லியாவை கருத்துக்களால் வதைத்தெடுத்து வருகின்றனர்.