Ad Code

Responsive Advertisement

கண்டுகொள்ளாத திரையுலகம்...! டீச்சர் ஆகும் லக்ஸ்மி மேனன்...! குவியும் வாழ்த்துக்கள்


சுந்தர பாண்டியன் எனும் ஒரே திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட நடிகை லட்சுமி மேனன் தற்பொழுது ஒரு திரைப்பட வாய்ப்பு கூட இல்லாமல் திரையுலகை விட்டு விலகி இருக்கிறார்.

பிரபுதேவாவுடன் இவர் நடித்த 'யங் மங் சங்' மட்டும் திரைக்கு வர காத்திருக்கும் நிலையில், திரைப்பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்த லக்ஸ்மி மேனனுக்கு கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான்.

என்றாலும் மனம் தளராத அவர், திரைத்துறையில் செலுத்திய கவனத்தை நடன பள்ளி ஒன்று துவங்கி ஆசிரியையாக செலுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வமுடையவரான லக்ஸ்மி மேனன் தனக்கு பிடித்த துறையில் களம் இறங்க இருக்கும் நிலையில் திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.