Ad Code

Responsive Advertisement

ஊத்தி கொடுக்க கொடுக்க ராவாக அடிக்கும் சிறுவர்கள்...! அதிர்ச்சி வீடியோ


மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது குற்றம், மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை அரசே சொன்னாலும், மறுபுறம் மது விற்பனையில் வரும் வருமானத்திற்காக அவர்களே தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக முந்தைய தலைமுறைகளுடன் அடுத்த தலைமுறை குழந்தைகளும் மது பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படியொரு அதிர்ச்சிகர மாற்றத்தை விளக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

திருச்செந்தூர் பகுதியில் நிகழ்ந்தகாக குறிப்பிடப்பட்டு இருக்கும்ஒரு காணொளியில், 5ம் வகுப்பை கூட தாண்டி இராத சின்னஞ்சிறு வாண்டுகள், ஒருவர் மது ஊற்றி கொடுக்க, கைதேர்ந்த குடிமகன்களை போல நேர்த்தியாக குடித்து முடிக்கின்றனர்.

இப்படியொரு காணொளி வைரலாகி வரும் காரணத்தினால், மதுஊற்றி கொடுக்கும் காணொளியில் இருப்பவர்களை, போலீசார் விரைவில் கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.