'சந்தோஷ் சுப்பிரமணியம்' திரைப்படத்தில் நடிகை ஜெனிலியா, குழந்தை தனமாக, 'ஒரு தடவை முட்டிவிட்டு இன்னொருதடவை முட்டவில்லையெனில் கொம்பு முளைக்கும்' என்றபடியே நடித்திருப்பார்.
கேட்க குழந்தை தனமாக இருக்கும் ஜெனிலியா நடித்த இந்த காட்சி தற்பொழுது உண்மையிலேயே நடந்திருக்கிறது. மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சியாம் லால் சாதவ் (74).
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இவருக்கு தலையில் அடி பட்டு இருக்கிறது. இதற்கு அவர் சிகிச்சை எடுத்து கொண்டாலும், திடீரென தலையில் கொம்பு முளைக்க துவங்கி இருக்கிறது.
என்ன செய்வதென்று தெரியாது அதனை அவரே உடைத்தெறிந்து இருக்கிறார். என்றாலும் கொம்பு மீண்டும் முளைக்க, மருத்துவமனை சென்று தனது நிலையை விளக்கி இருக்கிறார்.
இந்நிலையில் யாதவை ஆராய்ந்த மருத்துவர்கள், தலையில் அடிபட்டது காரணமாக ஒரே இடத்தில கோர்ட்டின் அதிகம் சுரந்து ஒரே இடத்தில் குவிந்தால் கொம்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இது ஒரு வினோத நோய் இதற்கு, டெவில் ஹார்ன் (பேய் கொம்பு),செபஷீகஸ் கொம்பு என்ற பெயர்களும் உண்டு எனவும், கை, கால்கள், தலை போன்ற பகுதிகளில் இது தோன்றும் எனவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை வழியாக சியாம் தலையில் இருந்த கொம்பு அகற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த அபூர்வ நிகழ்வு சர்வதேச அறுவை சிகிச்சை இதழிலும் இடம்பெற இருக்கிறது.
ஒருவேளை ஜெனிலியா அக்கா சொன்னது போலவே ஒரு தடவ முட்டிட்டு மறுபடியும் முட்டாமல் விட்டா கொம்பு முளைக்குமோ..? உஷாரா இருங்க மக்களே..!
Social Plugin