தமிழ், தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி, திறமை என இரண்டும் பெற்ற அறிய நாயகிகளில் ஒருவராக வலம்வந்தவர் இந்த நடிகை.
விஜய், அஜித், ரஜினி என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடிபோட்ட இவர் உடல் எடை கூடி வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தார். இந்நிலையில் ஓரளவு உடல் எடையை குறைத்து, திரையுலகை மீண்டும் எட்டி பார்த்து இருக்கும் இவருக்கு முன்பு போல வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தான் ஏற்கனவே நடித்த முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டால், உடல் எடையை காரணம் காட்டி, 'உங்களால் கவர்ச்சி காட்ட முடியாது' என கூறிக்கூறி வாய்ப்புகள் நிராகரிக்கப்படுகிறதாம்.
திறமைக்கு இனி மதிப்பில்லை உடலை காட்டினால் தான் முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு என்பதை உணர்ந்த அவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கி இருக்கிறார்.
Social Plugin