Ad Code

Responsive Advertisement

இவனெல்லாம் நடிகனானா இப்படித்தான்..! நடிகரின் தோல்வியை பார்ட்டி வைத்து கொண்டாடும் சக நடிகர்கள்


திரைத்துறையில் 'நானும் அவனும் நெருங்கிய நண்பன், இல்லை இல்லை சகோதரர்கள்' என நடிகர்கள் பலர் பேசி ரசிகர்களின் கண்களை குளமாக்குவதை பார்த்திருப்போம்.

ஆனால் கேமராவுக்கு பின்னால் அதே நடிகர்களுக்குள் நடக்கும் விஷயங்களை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு போட்டி, பொறாமை, வஞ்சம் என சீரியல் வில்லிகளை போலத்தான் அடித்து கொள்வார்கள்.

இந்நிலையில் சின்னத்திரையை வழியே வெள்ளித்திரை வந்து இன்று உச்சம் தோட்ட நடிகர் ஒருவரும் இதேபோல ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறாராம்.

'விழாக்களில் நம்மை நேர்காணல் எடுத்த சின்ன பயல் எல்லாம் இப்படி வளர்ந்துவிட்டானே' என பலர் அவர் மீது பொறாமையில் சுற்றி திரிய, அவர்களுக்கு, நடிகரின் சமீபத்திய படங்கள் தொடர் தோல்வியை கொடுத்தது மாபெரும் விருந்தாகவே அமைந்தது.

ஏன், நடிகரை பிடிக்காத நடிகர்கள் சிலர் ஒன்று கூடி, 5 நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி வைத்து இதனை கொண்டாடி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.