Ad Code

Responsive Advertisement

'முடி வெட்ட, தாடி வளர்க்க' இவர் தாய்லாந்துதான் போவாரம்..! அதுவும் தயாரிப்பாளர் காசில்... நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்


முன்னணி நடிகர்களில் ஒருவரும் சர்ச்சை நடிகருமான இவர் அடிக்கடி தாய்லாந்து சென்று வருவது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

நடனம், இசை, பாடல், நடிப்பு என கமலுக்கு பின் பல திறமை கொண்ட நடிகர் இவர். திறமை மட்டும் இருந்து என்ன, சுயகட்டுப்பாடு இல்லையே என பலர் இவரை விமர்சிக்கும் அளவுக்கு அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியவர் இந்த நடிகர்.

'இப்போ நான் திருந்திட்டேன், பாருங்க சமூக கருத்துக்கள் கூட கூறுகிறேன்' என சில காலம் தமிழகத்தையே ஆட்டி படைத்த இவர், மீண்டும் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்து கெட்ட பெயரை சம்பாரித்தார்.

உடலை கவனிக்காமல் உடல் எடையும் கூட, 'ரசிகர்களே கூறுகிறார்கள் உடனே உடல் எடையை குறைக்கிறேன்' என, தன்னை புக் செய்த தயாரிப்பாளர்கள் காசில் வேகமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றார். அதுவும் இருமுறை.

ஆனால் திரும்பி வரும் போது, ஒருமுறை நன்றாக முடிவெட்டி இருந்தார், இரண்டாம் முறை நன்றாக தாடி முடி வளர்த்திருந்தாரே தவிர உடல் எடை குறைந்த பாடில்லை.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினர், 'தாடி வளர்க்க தாய்லாந்து தான் போகணுமா என்ன?' தயாரிப்பாளர்களே இன்னமும் இவரை நம்பி ஏமாறாதீர்கள்' என சகட்டு மேனிக்கு நடிகரை விமர்சித்து வருகின்றனர்.