Wednesday, 4 September 2019

அவளுக்கு தலைக்கனம் அதிகமாகிவிட்டது...! உச்ச தமிழ் நடிகையை திட்டி தீர்க்கும் தெலுங்கு திரையுலகம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையின் மீது தெலுங்கு திரையுலகினர் செம கடுப்பில் உள்ளனர்.


நடிகர்களுக்கு இணையான மவுசுடன் முன்னணி நடிகையாக வலம்வரும், நம்பர் நடிகையை தெலுங்கு சினிமாவிலிருந்தே ஒழித்துக்கட்ட தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் முன்னணி நடிகர் ஒருவர்.

குறிப்பிட்ட நடிகருடன் அம்மணி நடித்த மெகா பட்ஜெட் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 'படத்தின் ப்ரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை' என முன்னணி நடிகர்களை போல வீம்பு பிடிப்பவரான இந்த நடிகையோ ஆரம்பத்தில், பெரிய நடிகர் மெகா பட்ஜெட் படம் என்கிற காரணங்களினால் இப்பட ப்ரமோஷன்களிலும் கலந்து கொள்வேன் என வாக்களித்து இருந்தார்.

ஆனால் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் காதலனுடன் பறந்தவர்தான், படத்தின் வெற்றிக்கு கதைதான் காரணம் ப்ரமோஷன்கள் அல்ல எனக்கூறி நிகழ்ச்சிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டாராம்.

இதனால் கடுப்பான படக்குழுவினரும், நாயகனும் நாயகியின் பெயரை தெலுங்கு திரையுலகில் டேமேஜ் செய்ய துவங்கி இருக்கின்றனராம்.

Disqus Comments
'