Friday, 6 September 2019

யாரு ஆண்டி..! படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்


ஜெமினி திரைப்படத்தில் அறிமுகமாகி கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவை வலம்வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். அஜித், கமல், விக்ரம் என டாப் நாயகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நாயகியாகவும் வலம்வந்த இவர் கடந்த 2013 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் வாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் குறும்புக்கார நெட்டிசன்கள் பலர், ஆண்டி என கலாய்த்து கருத்து தெரிவிக்க, அப்படி கலாய்த்தவர்களையே ஜொள்ளுவிட செய்யும் அளவிற்கு படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி திக்குமுக்காட செய்து விட்டார்.

Disqus Comments
'