தமிழர்கள் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றையே மாற்றும் கண்டுபிடிப்புகள் கீழடியில் தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.
மதுரையை ஒட்டி அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கடந்த 5 வருடங்களாக பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் அகழ்வாராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இதுவரை 15000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ள நிலையில், சுமார் 2600 வருட பழமையான படிமங்கள் இந்தியாவிலேயே மூத்த குடி தமிழர்கள் தான் என வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறது.
இப்படிப்பட்ட வரலாற்று சான்று மீடியாக்கள் பேச தவறியதால் தமிழகம் தாண்டி எவருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 'சமூக அக்கறை கொண்ட விஷயங்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யுங்கள் ' என நடிகர் விஜய் கொடுத்த அறிவுரையின் பெயரில்,
'கீழடி தமிழ் நகரீகம்' என்கிற தலைப்பை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள கீழடி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
Social Plugin