Ad Code

Responsive Advertisement

வரலாற்றை மாற்றி எழுதிய கீழடி...! விஜய் ஸ்பீச்சுல இதை கவனிக்காம விட்டுடீங்களே பாஸ்...!


கடந்த செப்டெம்பர் 19ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்பட இசைவெளியீட்டுவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

எவ்வளவும் பிரமாண்டம் என்றால், தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க கீழடி அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பற்றி எவருமே கண்டுகொள்ளாத அளவுக்கு விஜய் பற்றின பேச்சுக்களால் தமிழகம் ஸ்தம்பித்தது.

ஆம், கடந்த 5 வருடங்களாக மதுரையின் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளின் திருப்பமாக ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவின் வரலாற்றையே மாற்றும் மாபெரும் கண்டுபிடிப்புகள் அதே சமயத்தில் தான் வெளிச்சத்துக்கு வந்தன.

'இன்றளவும் சிந்து சமவெளி நாகரீகம் தான் பழமையானது' என இந்தியா கூறி கொண்டிருக்கும், நிலையில் அதனை விட 400 வருடங்கள் பழமையான தமிழன் பயன்படுத்திய பொருட்கள் கீழடியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.


சமீபத்தில் கிடைத்த படிமங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் சுமார் 2600 வருடங்கள் பழமையானது தமிழ் நாகரீகம் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

இதுவரை சுமார் 15000 மேலான, தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் பழமையான பொருட்கள் கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசு இதனை கண்டுகொள்வதாக இல்லை. தமிழனே கண்டுகொள்ளாதபோது, மத்திய அரசு கண்டுகொள்ளுமா என்ன..?