Ad Code

Responsive Advertisement

பராமரிப்பு இன்றி பரிதாப நிலையில் கீழடி...! அலட்சியம் காட்டுகிறதா அரசு..?


ஒட்டுமொத்த ஆசிய வரலாற்றையே புரட்டி போடும், அகழாய்வுகள் நிகழ்ந்த கீழடி பகுதி முறையான பாதுகாப்பின்றி கிடப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே முதன் முதலாக தோன்றிய கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம் என்பதனை நிரூபிக்கும் விதத்தில், சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், மதுரையை ஒட்டிய கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் தெரியவந்தது.

ஆரம்பம் முதல், இதனை மறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழ, அதனை நிரூபிப்பது போலவே இருந்தது அரசின் நடவடிக்கைகள்.


வட இந்தியாவில் பழமைவாய்ந்த பொருட்கள் கிடைத்தால் அருங்காட்சியகம் துவங்கி பாதுகாக்கும் மத்திய அரசு, மழையில் இருந்து பாதுகாக்க கூட கீழடிக்கு போதிய உதவிகள் புரியவில்லை என்பது அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் படியாக அமைந்திருக்கிறது.

இது குறித்து வீடியோ பதிவு செய்த பிரபல யூட்யூப் சேனல், மழையில் இருந்து இப்பேற்பட்ட பொக்கிஷங்களை பாதுகாக்க, ஆங்காங்கே தார்பாயை போட்டு மூடியிருக்கும் அவல நிலையை விளக்கி இருந்தது.


மேலும் இப்படியொரு சிறப்பு மிக்க கண்டுபிடிப்புகள் இன்னமும் வீடியோ பதிவுகளாக சேமிக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை, எடுக்க வருபவர்களையும் அனுமதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் தற்பொழுது முன்வைக்கப்பட்டு இருக்கிறது.