Ad Code

Responsive Advertisement

பிக்பாஸ்: அதிரடியாக வெளியேற்றப்பட்ட கவின்..? காட்டுத்தீயைப்போல பரவும் தகவல்


வெற்றி போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட கவின் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஒரு தகவல் வலம்வருகிறது.

சரவணன் மீனாட்சி தொடரில் நாயகனாக நடித்து பிரபலமானவர் கவின். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் காதலை சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் அவரது பெயர் சிறிது டேமேஜ் ஆனாலும் தனது சாமர்த்திய ஆட்டத்தால் இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்கிறார். அப்படி இருக்க சமீபத்தில் வெளியான தகவலின் படி, சரவணன், மதுமிதாவை போல கவினும் திடீரென வெளியேற்றப்பட்டதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

தனது தாயார் சிறை சென்ற விஷயம் அறிந்து, கவின் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் இந்த தகவல் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த தகவலின் நம்பகத்தன்மையை அடுத்த எபிசோட் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.