Ad Code

Responsive Advertisement

பித்தலாட்டங்கள் அம்பலமானதால் வெளியேற்றப்பட்டாரா கவின்..? வெளியான அதிர்ச்சி தகவல்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிகம் பேசப்பட்ட போட்டியாளராக வலம்வருபவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நாயகனான கவின்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கடைசி வரை இருந்து 50,00,000 ரூபாய் வெற்றி தொகைக்கு போட்டி இடலாம், அல்லது 5,00,000 ரூபாயை வாங்கி கொண்டு வெளியேறலாம் என அறிவிப்பு விடுத்தார் பிக்பாஸ்.

இதனை அடுத்து அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தும் வெளியேற தயாரானார் கவின். இன்றைய ப்ரோமோவில் கூட அவர் வெளியேற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


இந்நிலையில் கவின் வெளியேறுவதற்கான காரணம் இதுதான் என ஒரு தகவல் வலம்வருகிறது. அதாவது தான் எலிமினேஷன் லிஸ்டில் வரும் போது தனக்காக லட்சக்கணக்கில் வாக்களிக்க, ஒரு நிறுவனமே வெளியே செயல்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக கவின் மீது முன்வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இதனை அறிந்து கொண்டு விஜய் டிவி நிறுவனம், கவினின் பித்தலாட்டங்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக வெளியேற நிர்பந்தித்து இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவினுக்கு முன்னதாக நடிகை மீரா மிதுனம் இது போன்று, ஆதாரத்துடன் சிக்கி இருந்த நிலையில், ரசிகர்களின் இந்த கருத்து உண்மையாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.