பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் பலமான போட்டியாளராக வலம்வந்த கவின், பிக்பாஸ் வழங்கிய ஐந்து லட்சம் பணத்தோடு, 95வது நாளில் வெளியேறினார்.
இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், வெளியே வந்த கையோடு அவர் செய்திருக்கும் காரியம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஏல சீட்டு நடத்தி மோசடி செய்ததாக கவினது தாயார் உள்ளிட்ட 3 உறவினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, 5 வருட சிறை 2000 ரூபாய் அபராதம், முதலீடு செய்தவர்களின் 29 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவரது தாயார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அதன் காரணமாக இந்த விவரம் கவினுக்கு தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியேறிய கவின், நடந்ததை அறிந்து முதல் வேலையாக தனது தாயினை பெயிலில் எடுத்து வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
மேலும், அவர்கள் ஏமாற்றியதாக கூறப்படும் 29 லட்சம் ரூபாயை, திருப்பி அளிக்கும் வேலையிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறாராம். இதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த 38 லட்சம் ரூபாய் பேருதவியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Social Plugin