பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்கள் அடிதடியில் இறங்காத குறையாக கடுமையான டாஸ்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்பொழுது, பைனல் வாய்ப்பை பெரும் போட்டியாளருக்கான டாஸ்குகள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ்லியாவுக்காக கவின் சாண்டியுடன் மோதும் காட்சிகள் அடங்கிய ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி.
ஆரம்பம் முதல் சாண்டி, கவின் ஜோடி நெருங்கிய நண்பர்களாக மக்களை கவர்ந்தவர்களாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் இந்த நட்பிலும் விரிசல் விழுந்து வருகிறது.
டாஸ்க் ஒன்றின் போது, சாண்டி தவறுதலாக லொஸ்லியாவின் மேல் மோதிவிட அவர் கீழே விழுந்து விடுகிறார். இதனை கண்டு துடிதுடித்து போகும் கவின், சாண்டி வேண்டுமென்றே செய்ததாக அவரை திட்டி தீர்க்கிறார்.
இதனை கண்ட ரசிகர்கள் பலரும், 'பல்வேறு சூழ்நிலைகளில் தனக்கு உறுதுணையாக இருந்த சாண்டியையே திட்டும் கவின் நன்றி இல்லாதவன்' என விமர்சித்து வருகின்றனர்.
#Day88 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/ZyYBE7cMiV— Vijay Television (@vijaytelevision) September 19, 2019
Social Plugin