Ad Code

Responsive Advertisement

அவனிடம் சொல்லிடாதீங்க ப்ளீஸ்..! கைதான கவினின் தாயார் விடுத்த வேண்டுகோள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ள, நடிகர் கவினின் தயார் சில வாரங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

இந்நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த கவினின் நண்பரும் அருவி திரைப்படத்தில் நடித்தவருமான பிரதீப் ஆண்டனி, 'கவினின் குடும்பம் திருச்சியில் கௌரவமான ஒரு குடும்பம். அவர்கள் நாணயமாக தான் சீட்டு போட்டு நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இடையில் பார்ட்னராக இருப்பதாக கூறி இணைந்த ஒரு நபர் தான் இவர்களை ஏமாற்றி விட்டார். இதனால் பணம் போட்டவர்கள் வழக்கு தொடர்ந்துவிட்டனர். இது நடந்த போது கவின் பத்தாவது படித்து கொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தது.


கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே அடிக்கடி, நிறைய பணம் சம்பாதித்து இந்த பிரச்சனையில் இருந்து தன் தாயை காப்பாற்றுவது குறித்து பேசி கொண்டிருப்பார். அவரது தாயார் கைதானவுடன் விஜய் டிவி நிர்வாகமும், 'இந்த விஷயத்தை கவினிடம் கூறலாமா' என கேட்டது.

அவரது தாயார் தான், 'அவனுக்கு நீண்ட நாட்கள் கழித்து கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு வீணாக கூடாது' என கவினிடம் கூறவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டார்' என தெரிவித்து இருந்தார்.