என்றாலும் இப்பொழுது வரை லொஸ்லியா உடன் காதல் என்கிற கோணத்திலேயே சென்று கொண்டிருக்கிறது அவரது நடவடிக்கைகள். இப்படி இருக்க நிகழ்ச்சிக்குள் நடைபெறும் கவின்-லொஸ்லியா காதல், நாடகம் என்பது போல பேசி அதிர வைத்து இருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர்.
லிப்ரா ப்ரொடக்சன் என்கிற பெயரில் திரைப்படங்கள் தயாரித்து வரும் இவர், கவினின் 'நட்புன்னா என்னனு தெரியுமா?' என்கிற படத்தையும் தயாரித்தவர். இவர் அளித்த பேட்டி ஒன்றில்,
கவின் 3 வருடங்களாக, ஏன் இன்னமும் வெளியே ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவே லொஸ்லியா உடன் காதல் என்பது போல அவர் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கவினின் இந்த நடவடிக்கை வெளியே இருக்கும் அவரது நிஜ காதலியையே கோபத்தில் ஆழ்த்தி இருப்பதாகவும், அவர் வெளியே வந்ததும் 'லொஸ்லியாவா? அவரா?' என ஒரு மாபெரும் பஞ்சாயத்தே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Social Plugin