Ad Code

Responsive Advertisement

இளம் பெண்ணுடன் ஆபாசமாக பேசிய பிக்பாஸ் கவின்..? சர்ச்சையை ஏற்படுத்திய வாட்சப் பதிவு


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்று கொண்டிருக்கும் சர்ச்சைகள் போதாதென்று, அதில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மேலும் சர்ச்சைகளை கிளப்பி கொண்டிருக்கிறது.

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கவின், நடிகை ப்ரியா பவானி சங்கரை காதலித்ததாக ஒரு பதிவு வைரலானது. அதன் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது ஒரு வாட்ஸப் பதிவு.

குறிப்பிட்ட பதிவில், இளம் பெண் ஒருவரிடம் மது அருந்துவது, உறவு வைத்து கொள்வது குறித்து சர்ச்சையான முறையில் கவின் பேசுவது போல காட்டப்பட்டு உள்ளது.

இந்த பதிவு உண்மையானது தானா என்ற கேள்வி ஒரு புறம் எழ, கவினை வெறுப்பவர்கள் கூட இது உண்மையாக இருக்க முடியாது என அடித்து கூறி வருகின்றனர்.