பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பது போன்ற பதிவால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகையும், அதன் போட்டியாளர்களுள் ஒருவருமான கஸ்தூரி.
'மக்கள் நீதி மய்யம்' கட்சி துவங்கியதும், தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் நடிகர் கமல் ஹாசன்.
ஆனால் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் நடைபெற்ற பல சம்பவங்கள் இன்னமும் புரியாத புதிராகவே இருந்து வரும் நிலையில், 'ஒரு நிகழ்ச்சியையே கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தெரியாதவர் தமிழகத்தை எப்படி ஒழுங்காக ஆளுவார்?' என மக்கள் விமர்சிக்கும் படி செய்துவிட்டது.
இதன் விமர்சனங்கள் எத்தகைய உச்சம் அடைந்திருக்கிறது என்றால், அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர துடித்து கொண்டிருக்கும் கஸ்தூரியே அதனை எச்ச நிகழ்ச்சி என பதிவிட்டு இருப்பதுதான்.
மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார் என கூறப்பட்ட நிலையிலும், நேற்று சேரன் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கஸ்தூரி அந்நிகழ்ச்சியை விமர்சிக்கும் படி மறைமுகமாக தாக்கி பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.
சே !!! Disappointed. Most manipulated show ever.— Kasturi Shankar (@KasthuriShankar) September 22, 2019
எச்சே !!!#nohashtag 👁
Social Plugin