Ad Code

Responsive Advertisement

உங்க நிகழ்ச்சினா அவளுக்கு உசுரு...! ஆனா உங்கள பாக்க அவ இல்ல... கமலிடம் கண்ணீர் விட்ட சுபஸ்ரீ பெற்றோர்


பேனர் சரிந்து, சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

சிலநாட்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மென்பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவது பேனர் கலாச்சாரத்திற்கு எதிராக, மக்களை சபதமெடுக்க செய்தது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரும் இனி பேனர் வைக்க கூடாது என்ற முடிவை எட்டி இருக்கின்றனர்.

இப்படி இருக்க, 'மக்கள் நீதி மய்யம்' கட்சி தலைவரான நடிகர் கமல் அமைதி காத்து வந்த நிலையில், 'ஏன் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?' என்ற கேள்வியை பலரும் முன்வைத்தனர்.

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள 'சுபஸ்ரீ' வீட்டிற்கே இன்று சென்ற நடிகர் கமல்ஹாசன், அவரது பெற்றோரை நேரில் சந்தித்து 'கோடிகள் கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாதது உங்கள் இழப்பு' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.

அப்பொழுது சுபஸ்ரீயின் பெற்றோர், 'உங்க நிகழ்ச்சினா அவளுக்கு உசுரு, உங்கள நிகழ்ச்சியில பாக்கவே கடைசி ரெண்டு நாளு ஆர்வமா இருப்பா. இப்போ நீங்களே வந்திருக்கீங்க, ஆனா உங்கள பாக்க அவ இல்ல' என கண்ணீர் விட்டது நடிகர் கமலையும் கண்கலங்க செய்தது.