திரைத்துறையில் 'திருமணமாகிவிட்டால் வாய்ப்புகள் கிடைக்காது' என்ற நிலை மாறி நாயகர்களுக்கு இணையாக, திருமணமாகியும் முன்னணி நடிகைகளாக பலர் ஜொலிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இப்படி சக நடிகர் ஒருவரை காதல் திருமணம் செய்து, குழந்தைகள் இடைநிலை பள்ளி செல்லும் நிலையிலும், மீண்டும் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நாயகியால் தற்போதைய முன்னணி நாயகிகள் கதிகலங்கி நிற்கின்றனர்.
நடித்தால் விஜய் அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் தான் என்றில்லாமல், முன்னணி நாயகிகள் பலர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நம் திருமணமான நடிகையின் சமீபத்திய திரைப்படம் வெளிநாட்டு அமைச்சர்களே புகழும் அளவிற்கு மாபெரும் வெற்றி அடைந்தது. இதன் காரணமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அனைத்தும் அவர் வீட்டு வாசலை தட்ட,
முன்னணி நாயகிகள் பலரும், அந்த வாய்ப்புகளை பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
Social Plugin