ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக பிரபலமடைந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை கெடுத்துக்கொண்டவர் நடிகை ஜுலி.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கேலி கிண்டல்களுக்கு ஆளான அவர், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே என ரசிகர்கள் கூறும் அளவுக்கு, இத்தனை கேலி கிண்டல்களுக்கு பிறகும் ஏதாவதை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது படவாய்ப்புகள் இன்றி குறும்படங்களில் நடித்து வரும் இவர், யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சமூக பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பட,
எனக்கு பயம் கிடையாது தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எந்த பிரச்சனை வந்தாலும் போராட நான் தயார். 'தமிழ் எங்கள் மூச்சு... வேண்டாம் ஹிந்தி பேச்சு...' என மத்திய அரசை விமர்சிக்கும் வாசகங்களையும் கூறி அதிரவைத்து இருக்கிறார்.
Social Plugin